திருப்பூவணத்தல மகாத்மியம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உ
சிவமயம்

Thirup1.jpg


திருப்பூவணத்தல மகாத்மியம்


இயற்றியவர்
K.உமையொருபாகம் பிள்ளை அவர்கள்
முன்னாள் ஆசிரிய மானேஜர்
கொங்கங்குளம் (சாத்தூர் தாலூகா)


வெளியிட்டவர்
G.கிருஷ்ணய்யர் அவர்கள்


உரிமையாளர் ‘ஜோதி கிருஷ்ணா கபே‘
திருப்புவனம்.


சீதாலெக்ஷிமி அச்சகம், திருப்பூவணம்.
Thirup2.jpg


விநாயகர் துதி
உள்ளமெனுங்கூடத்திலூக்கமெனுந்தருநிறுவிஉறுதியாகத்
தள்ளறியஅன்பென்னுந்தொடர்பூட்டிஇடர்படுததித்தருகட்பாசக்
கள்ளவினைப்பசுபோதக்கவளமிடக்களித்துண்டுகருணைஎன்னும்
வெள்ளமுதம்பொழிசித்திவேழத்தைநினைந்துவருவினைகள்தீர்ப்பாம் (பாரதம்)


முருகன்றுதி
ஆடும்பரிவேலணிசேவலெனப்
பாடும்பணியேபணியாயருள்வாய்
தேடுங்கயமாமுகனைச்செருவிற்
சாடுந்தனியானைசகோதரனே (அருணகிரி)


சரஸ்வதி துதி
வெள்ளைக்கலையுடுத்தி வெள்ளைப்பணிபூண்டு
வெள்ளைக்கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியாசத்தில் அரசரோடென்னைச்
சரியாசனத்தில் வைத்ததாய்திருப்பூவணத் தல மான்மியம்


பல்லவி
பூவனேஸ்வரா ...... திருப்.....(பூ)


அநுபல்லவி
நின்; பொன்னடிமலர் போற்றினேன்றிருப் (பூ)


சரணம்
பாரிசாதமர நீழலிலெழுந்த
பரம்பொருளே! எனப் பகலவன் பணிந்தான்
தாரணிமாலுக்கோர் சக்கரம் அணிந்தாய்
தருமஞ்சன்: தாதாஸ்தியே
மருவுந்தண் மலராக்கிய (பூ)


உன்னையே மறந் தம்மையை வழிபட்ட
உயர்திரனாசனன் அரக்கனாய்ப்பிறந்திட
உண்மையை நாரதருணர்ந்துரை செய்திட
ஓர்ந்தயனின்றீர்த்தமாடி
சார்ந்தபழி தீர்ந்தான் பாடிப் (பூ)


உற்பலாங்கி யென்பாளை மணந்திட
ஓர்ந்த இருபதாடவரும் மடிந்திட
விற்பனைமின்னம்மையே கதியென்றிட
வேதன் விதியினை மாற்றியே
மாதின் மணம் நிறைவேற்றினை (பூ)


ஊர்வசியையுற்று நோக்கிய நான்முகன்
உறுபினிதீரநின், ஆலடிமேவியுன்
காருறு ஆலயங்கவின் றீர்த்தண்டமும்
கட்டித்தவ, முற்றே, வரம்
பெற்றுப் பயனுற்றான்றிருப் (பூ)


வாலகில்லிய முனிவரர்தனை மதியாத
வன்பழி தீரமாமலரம்மை மாலுடன்
பூவணத்துனைப் போற்றிப் புனித நீராடவே
பொன்மொழிலக்குமி தீர்த்தமே
அன்னைமுனாக்கினளார்குமே (பூ)


தக்கன்மகளுமை, தவஞ்செய மணந்து
தம்பதியர்கைலை சென்றிடச்சினந்து
வெட்கியே தக்கன்செய், வேள்வியையறிந்து
வீரபுத்திரனா, லவன்சிரம்
வீழ்த்தி வேள்வியுமேயொழித்தனை (பூ)


தமக்கெதிராய்த்தக்கன்றான் செயும் வேள்வியை
தடைசெயச் செல்லுமுன், விடைபெறாவம்பிகை
யுனைப் பரிவாய்பாரி, சாதமரத்தின்கீழ்
முளைத்தாய் பெருநிதியே: பிழை
பொறுத்தாளெனவே சார்ந்தனள் (பூ)


சுச்சோதி தன் தந்தை, தேவவர்மாவிற்கும்
சோதியிற்கலந்ததன், முன்னோனைவர்க்கும்
நற்கதியருள்க! வென்றோர்லிங்கம் நாட்டியே
துதிமாலைகள் பல சாற்றியே
கதிதாவென வுனைப் போற்றினான் (பூ)


இந்திரதீர்த்தம் மணிகுண்டதீர்த்தம்
எழிலுறுவைகையில் வசிட்டரின் றீர்த்தம்
இலக்குமி தீர்த்தமும் பிர்மதீர்த்தம்
எரிசூரிய, சந்திர தீர்த்தமே
அறியாதுறு, பழியறத்தீர்க்குமே (பூ)


இல்லறந்துறந்து எதேச்சையாயலைந்து
நல்லறமனைவி, மக்களோடிணைந்து
வள்ளலெனும் நளன் உன்னையேயடைந்து
வைகாசித்தேர்த்திருவிழா
வை,நேசித்தே தொடங்கினான்


மன்றுளே நர்த்தனங் கண்டெதிர்த்தாடிய
மாபழியறக் காளிமலர்லிங்கம் நாட்டினாள்,
பொன்றாவரமுற்ற, புனிதனாம் மார்க்கண்டன்
பூம்பால் பழப்பஞ்சாமிர்தத்
தேன்மாரி பெய்தே போற்றினான் (பூ)


அப்பர் சுந்தரர் சம்பந்தர் நாயன்மார்
அருட்பரமானந்தத் தேவார மோதினர்
செப்பருங் கருவூரர் திருவிசைப்பாவினால்
சிந்தித்துணையே பாடினார்
பந்தப்பிணியே சாடினார் (பூ)


தென்னாட்டின் முடிவேந்தர் சேரபாண்டியசோழர்
தன்னோடாரூரர் இத்தல தரிசனங்கண்டு
பொன்பொழில் நிறை திருப்பூவணமீதோ, வென்
றேற்றித்துதி சாற்றி மலர்
தூற்றிப் பணிந்தே பாடினார் (பூ)


உன்னடியார்கட் குணவிட்ட வேசியாம்
மின்னனையாளுனைப் பொன்னுரு வாக்கிட
எண்ணமிட்டேங்கவே, எழிற்சித்தராய் வந்து
(ரசவாதப்) பொன்னீந்துன் கன்னத்தொரு
சின்னஞ் செய்திட வோர்ந்தனை (பூ)


அண்டமுண்டோனும் அயனுங் காணறியா
ஆதியே வுன்னடியாரிடர்களை வாய்
தொண்டனுமை யொருபாக முன்னருளால்
துதிபூவணத் தலமான்மியம்
மதிகூடியவரை யோதினேன் (பூ)


பூவணநாதர் சகாயம்
மங்களம்


Thirup3.jpg


(படங்கள் இணைப்பும், மின்னாக்கமும்
முனைவர்.கி.காளைராசன், துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம்)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 30 டிசம்பர் 2012, 12:55 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,335 முறைகள் அணுகப்பட்டது.