அன்றொரு நாள் : ஜூன் 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

ராஜம்


சரி, இந்த இழையைத் தொடங்கிய 'இ' சார் அமெரிக்க வாழ்வில் மயங்கிக் கிடக்கிறார்போலத் தோன்றுகிறது! அதனால் ஒரே ஒரு குறுக்கீடு இன்று!
+++++++++++++++++++++++++++++


ஜூன் 3. இதில் என்ன சிறப்பு?


நம் கலைஞர் மு. க மற்றும் பிறர் போலவே ... பல உயிரினங்களும் ஒவ்வொரு நாளும் பிறக்கின்றன, சாகின்றன இந்த நாளில். ஆனாலும் ... இந்த நாளில் பிறந்த ஒரு சிலர் பிற பலரை வழிப்படுத்தியதை மறக்க முடியாது. எனவே இந்தப் பதிவு!


"போர்ட்டோரிக்கோ" (Puerto Rico: http://en.wikipedia.org/wiki/Puerto_Rico) என்ற இடத்திலிருந்து அமெரிக்க நியூயார்க்கில், ப்ரூக்லின் என்ற இடத்தில் குடியேறிய பெற்றோர்களுக்குப் பிறந்து அங்கே வளர்ந்தது ஒரு குழந்தை. ப்ரூக்லின் என்ற இடத்தில் வளருவது இலேசுப்பட்டதில்லை/எளியதில்லை. பள்ளிப் படிப்பு முடிந்து, பல்கலைக்கழக நிலையில் இந்தக் குழந்தை, இப்போது பெரியவர், எப்படியோ யேல் (Yale) பல்கலைக்கழகம் என்று எனக்கு நினவு, அதில் மாட்டிக்கொண்டார்; அதிலும் ... சமஸ்க்ருதம் (Sanskrit) படிப்பில் மாட்டிக்கொண்டார்!


பாணினி இவர் நினைவில் அகப்பட்டார். கன பாடமோ, கரதலைப் பாடமோ, என்னவோ, எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள் ... இவரை உலுக்கிவிட்டால் பாணினியும் பதஞ்சலியும் நம் காதுகளில் மட்டுமில்லை, கால்களிலும் வந்து வீழும்.


இவரிடம் நான் மாணவியாய்ச் சேர்ந்தேன். எனக்கோ சமஸ்க்ருதம் என்றால் ஒரு மண்ணும் தெரியாது. என் நாக்கு வளையாது! எப்படியோ (மதுரை சண்முக வடிவு அம்மா வீணை படிக்கும் மாணவியாக என்னை ஏற்றுக்கொண்ட மாதிரி) இவரும் என் "சமஸ்க்ருத" உச்சரிப்பை ஏற்றுக்கொண்டார்! யோசித்துப் பாருங்கள் ... மதுரையிலிருந்து வந்த ஒரு வடமா பாப்பாத்தியின் "சமஸ்க்ருத" உச்சரிப்பை ஓர் அயல்நாட்டுப் பேராசிரியர் பொறுத்துக்கொண்டதை!!!


அது மட்டுமில்லை. மிகவும் நிறையச் சொல்லலாம் இவரின் அன்பான கவனிப்பைப் பற்றி. ஆனால் சுருக்கமாக ...

பாணினி, பதஞ்சலி, ... என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள் ... இவரிடமிருந்து மிகச் சரியான விடை கிடைக்கும்.

யார் இந்தப் பெரியவர்? என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. ஜியார்ஜ் கார்டோனா (George Cardona).

எதற்காக இந்த இழை என்றால் ... ஒரு முறை அவரை நான் கேலி செய்திருக்கிறேன்: உங்கள் பிறந்த நாளும் சமஸ்க்ருதத்தை வெறுக்கும் எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர் திரு மு.க. அவர்களின் பிறந்த நாளும் ஒன்றே (June 3)!

என் அன்பு ஆசிரியருக்கு என் வணக்கம் எப்போதும் இருக்கும்.


+++++++++++++++++++++++++++++

அன்புடன்,
ராஜம்


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:51, 4 ஜூன் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்_:_ஜூன்_3&oldid=10978" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2012, 09:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,177 முறைகள் அணுகப்பட்டது.