ஆ -ஆகும் காய் பிஞ்சிலே தெரியும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் ஆகும் காய் பிஞ்சிலே தெரியும்
ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அதிர்ஷ்ட்டம் இருக்கிறது கழுதை மேய்க்க.
ஆசை வெட்கம் அறியாது.
ஆடமாட்டாவள் கூடம் கோணல் என்றாளாம்.
ஆடிக்காற்றிலே அம்மி பறக்க இலவம் பஞ்சுக்கு எங்கே கதி?
ஆடி காலும் பாடிய நாவும் சும்மா இரா.
ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
ஆடு கொழுக்கிறதெல்லாம் இடையனுக்கு இலாபம்.
ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
ஆபத்துக்குப் பாவமில்லை.
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துக்கு சவுக்கு.
ஆராய்ந்து பாராதான் காரியம் துயரம் தரும்
ஆடியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச் சக்கரை.
ஆள இல்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
ஆறு போவது போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:37, 27 செப்டெம்பர் 2011 (UTC)
.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 13:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,187 முறைகள் அணுகப்பட்டது.