எரு​மை​க​ளுக்கு ஒரு திரு​விழா

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

கட்டுரையாளர்: ஏ.பேட்​ரிக்


உப்​பிட்​ட​வரை உள்​ள​ள​வும் நினைக்க வேண்​டும் என்​பது பழ​மொழி.​


இது மனி​தர்​க​ளுக்​கா​னது.​

 

ஆனால் நீல​கிரி மாவட்​டத்​தி​லுள்ள பழ​ங்​கு​டி​க​ளான தோட​ரின மக்​கள் தாங்​கள் வளர்த்​து​ வ​ரும் எரு​மை​க​ளுக்​கும் உப்​பிட்டு திரு​வி​ழா​வாக கொண்​டாடி வரு​கின்​ற​னர்.​

 

இது தமி​ழர்​க​ளின் பண்​டி​கை​யான மாட்​டுப் பொங்​கலை போன்​றது என்​றா​லும்,​​ இயற்கை பேர​ழி​வு​கள் ஏற்​ப​டா​தி​ருக்​கும் வகை​யில்,​​ தோட​ரின மக்​கள் குடி​யி​ருக்​கும் பகு​தி​யான மந்து பகு​தி​க​ளி​லேயே இத்​த​கைய வழி​பாட்​டினை நடத்தி வரு​வ​தா​க​வும் அம்​மக்​கள் கூறு​கின்​ற​னர்.​

 

இவ்வாண்​டின் முதல் விழா உத​கை​யி​லுள்ள தமி​ழ​கம் மந்​தில் கொண்​டா​டப்​பட்​டது.​

 

இதை​யொ​டடி மந்து பகு​தி​யி​லுள்ள கோவில் பூசா​ரி​கள் கோவி​லின் அரு​கி​லுள்ள வனப்​ப​கு​திக்​குள் சென்று உப்பு இடு​வ​தற்​கான குழியை எடுத்து அதில் உப்பைக் கொட்​டி​னர்.​ அதன்​பின்​னர் அங்கு தோட​ரின மக்​கள் வளர்த்​து​வ​ரும் எரு​மை​கள் கொண்டு வரப்​பட்டு அவற்​றிற்கு உப்பு தண்​ணீர் வழங்​கப்​பட்​டது.​பின்​னர் இந்த உப்பு தண்​ணீ​ருக்கு தோட​ரின ஆண்​கள் தங்​கள் பாரம்​ப​ரிய உடையை அணிந்து காட்டு புற்​க​ளைத் தூவி வழி​பட்​ட​னர்.​பின்​னர் அந்​தக் குழியி​லி​ருந்த மண்ணை எடுத்து தங்​கள் நெற்​றி​யில் பூசிக்​கொண்​ட​னர்.​அதை​ய​டுத்து தங்​க​ளது கோரிக்​கை​கள் நிறை​வே​று​வ​தற்​காக அந்த உப்​புத்​தண்​ணீரை தாங்​க​ளும் தீர்த்​த​மாக எடுத்து குடித்​த​னர்.​

 

அதை​ய​டுத்து கோவி​லுக்​குள் சென்று தங்​க​ளது பாரம்​ப​ரிய வழக்​கப்​படி வழி​பா​டு​களை நடத்​தி​னர்.​பின்​னர் உப்பு கலந்த மோர் மற்​றும் தேன் ஆகி​யவை தோட​ரின பெண்​க​ளுக்கு பிர​சா​த​மாக வழங்​கப்​பட்​டது.​அப்​போது பெண்​க​ளும் தங்​க​ளது கோரிக்​கை​களை கட​வுள் முன் வைக்​கின்​ற​னர்.​

 

இவ்​வாறு செய்​தால் தங்​கள் வேண்​டு​தல் அடுத்த ஆண்​டின் உப்​புத் திரு​வி​ழா​வுக்​குள் நிறை​வே​று​மென்​பது அவர்​க​ளது நம்​பிக்​கை​யா​கும்.​இந்த விழா​வுக்​காக பெண்​கள் அனை​வ​ரும் சில நாட்​கள் விர​த​மி​ருப்​பர்.​இதை​ய​டுத்து கோவில் பூசாரி இங்​குள்ள இயற்கை இடங்​க​ளை​யும்,​​ நீரோ​டை​க​ளை​யும் குறித்து பிரார்த்​தனை செய்​வார்.​தன் மூலம் இயற்கை பேர​ழி​வு​கள் அப்​ப​கு​தி​க​ளில் ஏற்​ப​டாது என்​ப​தும் அவர்​க​ளது நம்​பிக்​கை​யா​கும்.​

 

இந்த நிகழ்ச்​சி​யை​ய​டுத்து அங்​குள்ள அனை​வ​ருக்​கும் மோர் மற்​றும் தேன் கலந்த பொங்​கல் வழங்​கப்​ப​டும்.​ இத்​த​கைய உப்​புத் திரு​விழா நிகழ்ச்​சி​கள் மாவட்​டத்​தி​லுள்ள அனைத்து மந்து பகு​தி​க​ளி​லும் நடத்​தப்​ப​டும்.​நில​வில் தண்​ணீர் இருப்​ப​தற்​கா​ன​ ஆ​ராய்ச்​சி​களை ஆளில்​லாத விண்​க​லத்​தின் மூலம் பூமியி​லி​ருந்தே நடத்தி வரும் சூழ​லில்,​​ காலங்​கள் மாறி​னா​லும் தங்​க​ளது பாரம்​ப​ரிய கலாச்​சா​ரத்தை மறக்​கா​மல் தோட​ரின மக்​கள் கொண்​டா​டி​வ​ரும் இந்த உப்​புத் திரு​விழா நிகழ்ச்​சி​கள் நீல​கிரி மாவட்​டத்​திற்கு வரும் சுற்​று​லாப் பய​ணி​க​ளை​யும் கவர்ந்​தி​ழுக்​கும் ஓர் அம்​ச​மா​கும்.​இந்த விழாவில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.


அவர்கள் தெய்வமாகப் போற்றும் எருமைகளை புகைப்படம் எடுக்கவும் நம்மை அனுமதிக்கவில்லை.


நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2010, 16:13 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,065 முறைகள் அணுகப்பட்டது.