கனாக் கண்டேன் தோழி!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கனாக் கண்டேன் தோழி !


ஆசிரியர்: ஸ்ரீலட்சுமி நரசிம்மாச்சாரியார்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 8127 Views
விலை: Rs. 65

                                                                                           
122.jpg


"மணி வெளுக்கச் சாணையுண்டு, எங்கள் முத்து மாரியம்மா... மனம் வெளுக்க வழியில்லை' எங்கள் முத்து மாரியம்மா... என்று மகாகவி பாரதியார் அன்று பாடினார். ஆனால், முக்கூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மாச் சாரியார் போன்ற மகான்களின் உபன்யாசங்கள் கேட்டால் கண்டிப் பாக மனமும் தூய்மையாகும்; நேரமும் பயனுள்ளதாகும். அவர் உபன்யாசங்களின் ஒரு பகுதியின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. திருமணமானது எட்டு விதமானது என்று விளக்குவதும் (பக்:16-17), ஸ்ரீ: என்று வைணவர்கள் போற்றும் மகாலட்சுமியின் பெருமையை விளக்குவதும் (பக்.22-28), ருக்மிணி பிராட்டியார் ஸ்ரீ கண்ணனைத் திருமணம் செய்து கொள்ள ஏழு ஸ்லோகங்கள் எழுதித் தூது விட்டு, அதை நிறைவேற்றிக் கொண்டதை விளக்குவதும் (பக்.84-96), ஒரு சாதாரணக் கல் தெய்வமாக மாறி உயர்ந்து நிற்பது எதனாலென்று கூறி, கல்லின் பெருமை கூறுவதும் (பக்.124), ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் வாக்கு வன்மைக்கும் சான்றான பகுதிகள் ஆகும்.நூலின் கடைசி ஐந்து அத்தியாயங்களில் ஸ்ரீ ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் உள்ள "வாரணமாயிரம்' எனும் ஆறாம் திருமொழியை விளக்குமிடங்கள் (பக்.168-195) ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் புலமையை நாம் நன்கு உணர உதவுகின்றன.அனைவரும் படித்து போற்ற வேண்டிய பயனுள்ள நூல்.--பவள சங்கரி திருநாவுக்கரசு. 01:49, 28 மே 2011 (UTC)

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://www.heritagewiki.org/index.php?title=கனாக்_கண்டேன்_தோழி!&oldid=6954" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 28 மே 2011, 01:52 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,828 முறைகள் அணுகப்பட்டது.