வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நடுகற்கள், கல்வெட்டு காட்டும் வரலாறு பகுதி 2

From மரபு விக்கி

Jump to: navigation, search
  • மேற்கோள் நூல் சுருக்கம்*

செங். நடு. > செங்கம் நடுகற்கள்

தரும. கல். > தருமபுரி கல்வெட்டுகள்

நடு. > நடுகற்கள்

ஆவ. இதழ் > ஆவணம் இதழ்

தரு. நடு. அகழ் > தருமபுரி நடுகல் அகழ்வைப்பகம்

தொல். வே. அர. > தொல்குடி - வேளிர் - அரசியல்

கிரு. மா. கல். > கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

S. I. I. > South Indian Inscriptions, ASI

E. I. > Epigraphica Indica

E.C. > Epigraphica Carnatica

*பொருள் கொள்ள உதவிய அகராதிகள் *

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (செ. சொ. பி)

Monier - williams, A Sanskrit English dictionary, 1899

  • பிராமண நடுகல்*

பிராமணர் படைத் தலைவர்களாய் இருந்துள்ளனர் என்றாலும் அவருள் எளியோர் எவரும் போரில் பங்கு பெற்று உயிர் துறந்த செய்தி இல்லை. ஒரு கோயில் மேலாளரான தன் ஆசானைப் பூசகன் தாக்கிக் கொல்ல வந்த போது அவருடைய மாணாக்கன் அதைத் தடுக்க முற்பட்டுள்ளான். அதனால் ஆத்திரமுற்ற கோயில் பூசகன் மாணாக்கனைக் கொன்று உள்ளான். அவனுடைய வீரத்தை மெச்சி அவனது ஆசான் அவனுக்கு நடுகல் நிறுத்தி உள்ளார். இது மிக அரிதான ஒரு நிகழ்ச்சி. கல்வெட்டுச் செய்தி  ப்ல்லவனையும் சோழனையும் இணைத்து ஒரு நூற்றாண்டு கால நிகழ்வை ஒருசேர குறிப்பது தான் முரணாக உள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்னி வாய்க்கால் எனும் ஊரில்
அமைந்துள்ள சிவன் கோயில் கோபுர வாயிலில் ஒரு நடுகல் உள்ளது. இதன் காலம் 9 ஆம்
நூற்றாண்டு.


(S.I.I. Vol. 12 No. 56 (ARN NO 144 of 1928-29)*ஸ்வதிஸ்தி** **ஸ்ரீ** **தெள்** / **ளாற்றெறிந்து** / **ராஜ்ய**(**மு**)**ங்**
**கொ** / **ண்ட** **நந்திப்** / **பொத்தரையர்**(**க்**) / **கு** **யாண்டு** *
*இரு** / **பத்தொன்றாவது** / **பராந்தக** **புரத்** / **து** **அறிந்தி** / **
கை** **ஈஸ்வர** **க்ர** / **ஹம்** **ஸரஸ்த** / **தாலுடையொ** / **ரும்** - - -
/ - - - **தளி** / **யிலாதாகி** **நின்ற** bh**a**ட்டரென்** **மாவலியநி** /
dha**ஸ்தாந** **மாள்வான்** **செ**(**வணற்குண்டு**) **கொ** / **ண்டு** **வந்து**
**மடமுஞ்** **சுட்டுக்** **காத்த** **ஷி**gu**ர** / **வரையு** **மெறிந்து** **
இவர்** **ஷிஷ்யந்** **ஒரு** **ப்ராம்** / **ஹனன்** **சத்திமுற்றத்** **தேவந்**
**றுண்டு** **ப** / **ட்டான்** **வல்லுவ**(**னாட்**)**டான்*

ராஜ்யம் - அரசு; க்ரஹம் - கோயில், வீடு; ஸரஸ்த(sa-rush) - சினம், கோவம்,
கடுகடுப்பான [anger, enraged] : Bhaட்டரென் - கோவில் பூசகன்; இdhaஸ்தாநம் -
இந்த கோயில் [this domain, region (of gods)] ; ஷிguரவன்(शिग्रु) -
அப்படியாகப்பட்ட மனிதர் (of a man) ; ஷிஷ்யன் - மாணாக்கன்; ப்ராம்ஹனன் -
வேதவினை மறையவன் (இவை யாவும் சமற்கிருதச் சொற்கள்)

போத்தரையன் - பல்லவன்; தால் - நாவு; தளி - கோயில்; மாவலியன் - வலிமை மிக்கவன்;
உண்டு - உணவு, சோறு; மடம் - மடைப்பள்ளி; சுட்டு - விறகுஎரித்து சமை(வடை சுடு
என்பதை நோக்குக); காத்த - பேணிய (Maintain); எறிந்து - அழித்து; துண்டு -
வெட்டப்பட்டு; பட்டான் - வீரச் சாவடைந்தான்.


மூன்றாம் நந்தி வர்மப் பல்லவனுடைய தெள்ளாற்றுப் போர் வெற்றியையும் அவன் தன் நாட்டாட்சியை மீட்டதையும் சிறப்பித்துக் கூறும் இக்கல்வெட்டு அவனுடைய இருபத்தொன்றாம் ஆட்சி ஆண்டு (868 CE) நிகழ்வு ஒன்றை நடுகல்லில் குறித்து உள்ளது. பராந்தகபுரமான இச்சென்னிவாய்க்கால் அறிஞ்சிகை ஈச்சுவரச் சிவன் கோயிலில் கோபத்துடனும் கடுகடுப்புடனும் பேசும் நாவுடையவரும், கோயிற் பணி இழந்த உடல் வலிமை மிக்க இக் கோயில் பூசகனான பட்டரன் இக்கோயில் நிருவாகம் ஆளும் செவணருக்கு சோறு கொண்டு வந்தும், கோயில் மடைப்பள்ளியில் விறகு எறித்து திருத்தளிகைக்கான சமையற் பணியைப் பேணியும் வருகின்ற அப்படியாகப்பட்ட மனிதரைத் தாக்கி அழித்ததோடு அல்லாமல் செவணரின் மாணாக்கனான *சத்திமுட்டத் தேவன்* என்ற பிராமணனைத் துண்டாக வெட்டிக் கொன்றான். இந்த சத்திமுட்டத் தேவன் வள்ளுவ நாட்டினன்.


மேற் கூறிய கருத்திற்கு இணங்க இக்கல்வெட்டில் இடம்பெறும் மாந்தர்களான பட்டரன், செவணர், சமையல்காரன், சத்தி முற்றத் தேவன் ஆகியோர் பிராமணர் என்பதால் இக்கல்வெட்டில் எட்டு சமற்கிருத சொற்கள் திணிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மக்கள் வழக்கு மொழி தமிழை நன்கு அறிந்திருந்தாலும் மதப்பற்று, தம் சமற்கிருத புலமை காட்டல் ஆகியவற்றின் காரணமாக செயற்கைக் கலவையாக ஒரு மொழியை உருவாக்கி உள்ளார்கள். இவ்வாறான மொழிநடை உள்ள மதத்துறை, ஆட்சித்துறைக் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு பெருவாரியான மக்கள் பேச்சு மொழி இது என்று அறிஞர்கள் தீர்மானிப்பது தவறானது எனலாம். இந் நடுகல்லை நட்டுக் கல்வெட்டு பொறிக்க ஏற்பாடு செய்தவர் செவணர் என்பது புலனாகின்றது. பட்டரன் வேலையில் ஏதோ குற்றம் புரிய அவனைப் பணியில் இருந்து செவணர் நீக்கியதால் கோயில் வேலை இழந்து பிழைப்பிற்கு வழியின்றிப் போகவே அதற்குப் பழிதீர்க்கும் எதிர்வினையாகச் செவணரை பட்டரன் கொல்ல் முற்பட்டுள்ளான் என ஊகிக்க முடிகின்றது.தென்னிந்திய நடுகற்கள் எனும் நூலில் இக்கல்வெட்டிற்கு விளக்கம் கூறியுள்ள வெங்கட சுப்பைய்யர் பெரு வலிமையன் என்ற பொருளுடைய மாவலியன் என்ற சொல்லை மாவலிவாணராயன் என்ற வாண மன்னனாகத் தவறாக உணர்ந்து அதனுடன் பொருத்தி, அவன் வடக்கே இருந்து படை எடுத்து வந்து மடைப்பள்ளி என்ற பொருளுடைய மடம் என்ற சொல்லை துறவிகள் மடம் எனத் தவறாகப் பொருள் கொண்டு அவன் மடத்தையும் அழித்து அதைத் தடுக்க வந்த சத்திமுற்றத் தேவனை அம்பால் கொன்றுவிட்டதாகவும் சொல்லி உள்ளது
மேற்சொன்ன கல்வெட்டு விளக்கத்துடன் பொருந்தி வராததை உணரமுடிகின்றது.


நாராய் ! நாராய்! செங்கால் நாராய்! என்ற சங்கப் பாடலில் இடம்பெறும் சத்திமுற்றத்தைச் சேர்ந்தவன் என்பது இவன் பெயராலும் அது குமரி மாவட்டத்தில் உள்ள ஊர் என்பது வள்ளுவ நாடன் என்ற கருத்தாலும் வெளிப்படுகின்றது. றகரம் பண்டு டகரமாய் ஒலித்தது. அதன்படி முற்றம் முட்டம் எனப் பலுக்கப்படல் வேண்டும். சத்தன் என்ற ஆள் பெயர் இகர ஈறு பெற்று சத்தி என வழங்கும். தமிழ முன்னோர் அயல் நாகரிகங்களை அமைத்தனர் என்பதற்குச் சான்றாக சில அயல் நாகரிக மன்னர் பெயர்கள் தமிழாக உள்ளன. அதில் துருக்கியின் ஒரு மித்தானி அரசன் பெயர் *Suttarna I *1490
- 1470 BC > *சத்தரண(*ன்). அதே போல் ஒரு Gija வழிவந்த கொரிய மன்னன் பெயர்* **
Sudo *634 - 615 BC > *சத்த*(ன்)

  • நவக்கண்ட நடுகல்*


பிறர் நலன் கருதி ஆடவர் தம் இன்னுயிரைத் தாமே தற்கொலையாக தெய்வத் திருவுரு முன் தம்மை பலியிட்டு உள்ளனர். தமிழில் இது தலைப்பலி எனப்பட்டது. தெலுங்கில் மிடிதலா அல்லது கண்டதலா என்று அழைக்கப்பட்டது. கன்னடர் இதை சிடிதலா என்றனர். தம் உடலை ஒன்பது துண்டுகளாக, ஒன்பது பாகமாகக் கூர்மையான வாளால் தாமே வெட்டிக் கொள்வது நவக்கண்டம் ஆகும். அவ்வாறான ஒரு நவக்கண்ட செய்தி கூறும் கல்வெட்டு கீழே:


நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் எனும் சிற்றூரில் உள்ள சுப்ரமணியர்
திருக்கோயிலின் செவ்வகக்கல்லில் நவக் கண்டம் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டாக
பதிவாகி உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. (S.I.I. Vol. 12 No. 106 /
A.R.N No.498 of 1908).

*ஸ்ரீ** **கம்ப** **பருமற்கு** **யாண்டு** **இருபதாவது** (**ப**)**ட்டை** **பொ
**(**த்**) / **த**(**னு**)**க்கு** **ஒக்கொண்ட** **நாகன்** **ஒக்கதிந்தன்** **
பட்டை** **பொத்தன்** **மே** / (**தவம்**) **புரிந்த** **தென்று** bha**
டாரிக்கு** **நவக்** **கண்டம்** **குடுத்து** / (**குன்றகத்**) **தலை** **
அறுத்துப்** **பிடலிகை** **மேல்** **வைத்தானுக்கு** **தி** / **ருவான்முர்** **
ஊரார்** **வைத்த** **பரிசாவது** **எமூர்ப்** **பறைகொட்டிக்** **கல்**(**மெ**)
/ (**டு** **செய்தாராவிக்கு**)**க்** **குடு**(**ப்**) **பாரானார்** **பொத்தனங்
** **கிழவர்களும்** **தொ** (**று**) / (**ப்ப**)**ட்டி** **நிலம்** **
குடுத்தார்கள்** **இது** **அன்றென்றார்** **கங்கயிடைக்** **குமரிஇ** / (**டை**
) **எழுநூற்றுக்** **காதமும்** **செய்தான்** **செய்த** **பாவத்துப்** **படுவா** /
**ர்** **அன்றென்றார்** **அனறாள்** **கோவுக்கு** **காற்ப்** **பொன்** **றண்டப்*
* **படுவார்**.*

பட்டை (பட்டம்) - ஒரு பறை வகை; பொத்தன் - அடிப்பவன்; குன்றகம் - சிறுகுவடு
போன்ற மேடை; பிடலிகை - தட்டு; கிழவர் - உரியவர், தலைவர்; படுவார் - வீழ்வார்;
தண்டம் - தண்டனைத் தொகை, Fine.

பல்லவன் கம்பவர்மனுடைய இருபதாவது ஆட்சி ஆண்டில் (883 CE) பறை அடிப்பவனான பட்டை
பொத்தனுக்கு, அவன் தந்தை *ஒக்கொண்ட நாகன் ஓக்கதிந்தன்* பட்டை பொத்தன் மேன்மையான தவம் செய்யக் கருதியவனாக படாரி எனும் துர்க்கைக்குப் படையலாகத் தன் உடலின் ஒன்பது பகுதிகளிலிருந்து தசைகளை வெட்டிய பின் சிறு குவடு போன்ற மேடை மேல் தன் கழுத்தை இருத்தித் தன் தலையைக் கத்தியால் தானே அறுத்து கொண்டையைப் பிடித்தபடி அத்தலையைத் தட்டின் மேல் வைத்தான். இச்செயலை மெச்சிய திருவான்மூர் ஊர் மக்கள் அதற்கு பரிசாக அவர் ஊர்ப் பறை கொட்ட நடுகல் மேடு நிறுவச் செய்தார்கள். *ஒக்கதிந்தன்* ஆவிக்குப் பறை அடிப்புக்கு (பொத்தனம்) உரியவர்கள் நிலக் கொடையாக, உயிர் ஈகம் செய்யும் வீரனுக்கு இணையாக அவனைக் கருதி தொறுப்பட்டி நிலத்தைக் கொடுத்தார்கள். இந்த அறத்தை ஏற்காதவர்கள் கங்கைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட எழுநூற்றுக் காதமுள்ள இந்த இந்தியப் பெருநிலத்தில் வாழுநர் செய்யும் பாவத்தை ஏற்பர் அதோடு அவர் வாழுங் காலத்தில் அரசாளும் மன்னவனுக்கு கால் பொன் தண்டம் செலுத்த வேண்டும் எனவும் இவ்வாறு சாவித்தும் தண்டனை வழங்கியும் கல்வெட்டு பொறித்து உள்ளனர். கம்ப வர்மனுடைய ஆட்சி வடக்கே நெல்லூர் வரை பரவி இருந்துள்ளது. திருவான்மூர் என்ற ஊரே இன்றைய மல்லாம் அல்லது அதன் அண்டை ஊர் எனலாம். திரு என்ற இதன் தமிழ்  வடிவமே வேங்கடத்திற்கு அப்பாலும் தமிழ் வழங்கும் நிலம் 1,000 ஆண்டுகளுக்கு முன்னம் வரை இருந்ததற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று.
விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார் கோட்டை சிவன் கோவிலில் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. (வெ. வேதாசலம், ஆவ. இதழ் 10,1999)


*சூரங்குடி** / **நாட்டு** **ஆ** / **தனூராந** / **கையம்** / **ஊர்கிழவன்** / *
*ஸ்ரீ** **வேழா** / **ன்** **சீலப்பு** / **கழான்** **க** / **லியுகக்கண்** / *
*டடி** **தன்** / **ம** **செட்டிக்கு** / **கோன்** **நோ** / **ற்றி** **தலை**/
**தந்தான்*

கிழவன் - ஊர்த்தலைவன்; வேள் > வேழ் - சிற்றரசன்; சீலம் - நல்ஒழுக்கம்; கண்டடி(
கண்டு + அடி) - அடிக்கரும்பு; நோற்றி - நோன்பு இருந்து; தலைதந்தான் - தலைப்பலி
கொடுத்தான்.

எட்டயபுரப் பகுதியில் இருந்த சூரங்குடி நாட்டின் பகுதியான ஆதனூரின் கையமூர் எனும் ஊருக்கு வேள் ஸ்ரீ வேழான் சீலப்புகழான் கலியுகக் கண்டடி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் *தன்ம செட்டிக்கு* நலம் வேண்டி *கோன்* என்பவன் நோன்பு இருந்து தன் தலையை வெட்டிப் பலி தந்து உள்ளான். வேழான் என்பது சிற்றரசானவன், சீலப்புகழான் என்பது நன்னடத்தையால் புகழுற்றவன், கலியுகக் கண்டடி என்பது கொடுமையான கலியுகத்தில் இனிக்கின்ற அடிக்கரும்பு போன்றவன் ஆகிய பொருளில் ஏற்றிப் போற்றப்பட்ட தன்ம செட்டி மன்னர்களைப் போல் புகழப்படுகின்றான். இவன் காலத்தில் சோழப் படை எடுப்பால் பாண்டியர் ஆட்சி குலைந்ததால் பாண்டிய வேந்தர் பெயரும், ஆட்சி ஆண்டும் கல்வெட்டில்
குறிக்கப்படவில்லை போலும். தன்ம செட்டியால் பயனடைந்த குடும்பத்தவன் அல்லது நிலக் கொடையை எதிர்ப்பார்த்து தன்னை பலி கொடுத்த ஏழை தான் கோன் எனபவன் என்று கொள்ளலாம். இதில் நவக் கண்டக் குறிப்பு இல்லாவிடினும் அது போன்ற ஒரு உயிர்ப்பலி தான் இந்த தலைப்பலியும்.

  • சதிக்கல்*

கணவன் இறந்ததும் அவன் மனைவியும் இறந்துவிட இருவருக்கும் எடுக்கப்படும் நினைவுச் சின்னம் தான் சதிக்கல். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வடநாட்டில் எளிய மக்களிடத்தும் நிலவிய குமுக வழக்கமாக இருந்தது. ஆனால் தென்னாட்டில் இந்த வழக்கம் அரசர், அமைச்சர், படைத் தலைவர் குடும்பங்களில் மட்டுமே நிலவியது. வேந்தனிடத்தில் அமைச்சராயும், படைத்தலைவராயும் இருந்தவர் மன்னரும், சிற்றரசருமே எனலாம். இவ்வாறு உடன்கட்டையேறி இறந்த பெண்கள் தெய்வம் என மதிக்கப்பட்டு பூசிக்கப்பட்டனர். அவ்வாறான சதிக்கல் கல்வெட்டு ஒன்று கீழே:


தருமபுரி மாவட்டம் கிருஷணகிரி வட்டம் ஜகதாப் மோட்டூர் எனும் ஊரில் அமைந்த
சதிகல் கல்வெட்டு. காலம் 11 ஆம் நூற்றாண்டு. (ஆவ. இதழ். 12, பக். 21)

*ஸ்வத்தி** **ஸ்ரீ** **இரட்டபாடி** **ஏழரை** **இலக்கமுங்** **கொ** / **ண்டு** *
*கொல்லாபுரத்து** **ஜயத்தம்ப** **நாட்டி** / **ப்** **பேராற்றங்கரைக்** **
கொப்பத்** **தாகவ** **மல்** / **லனை** **ஐஞ்சுவித்தருளி** **அவந்** **ஆனை** **
கு** / **திரை** **பெண்டிர்** **பண்டாரமகலப்** **பட்டவித்து** / **
வீராஸிங்காசநத்து** **வீற்றிருந்தருளிந** **கோ** / **ப்பரகேசரி** **பந்மரான** *
*உடையார்** **ஸ்ரீ** **ராஜே** / **ந்தர** **தேவர்க்கு** **யாண்டு** **ஐஞ்சாவது*
* / **விஜைராஜேந்திர** **மண்டலத்துத்** **தகடூர்** / **நாட்டுக்** **கங்க** *
*நாட்டுப்** **புல்ல** **மங்கலத்து** / **அவனமச்சி** **பள்ளியில்** **இவந்** **
மகந்** **சாமுண்** / **டந்** **பாம்பு** **கடிச்சு** **செத்தாந்** **இவந்** **
மணவா** / **ட்டி** **விச்சக்கந்** **தீபாஞ்சாள்** **அவள்**. **ம**- - -/ **ண்ப
** - - - **மாக** **நட்** - - *

பண்டாரம் - கருவூலம்; பட்டவித்து - சிறப்பு அழித்து, ஆட்சி ஒழித்து; அமச்சி -
அமைச்சர்; பள்ளியில் - சிற்றூர், அரண்மனை, இடம்; மணவாட்டி - மனைவி;
தீப்பாஞ்சாள் - உடன்கட்டை ஏறினாள்

சோழப் பெரு வேந்தன் ராஜேந்திரனுடைய ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1017) றிக்கப்பட்ட இந்நடுகல் கல்வெட்டு முதலில் அவனுடைய வெற்றிச் சிறப்புகளை கூறித் தொடர்கின்றது. இச்சதிக்கல் கல்வெட்டில் ராஜேந்திரச் சோழன் மேலைச் சாளுக்கியன் ஜெயசிம்மனிடம் இருந்து இரட்டப்பாடி ஏழரை இலக்கத்தையும் கைப்பற்றி கொல்லாபுரம் எனும் இன்றைய கோலாப்பூரில் இதற்காக வெற்றித் தூண் நாட்டியதையும், பேராற்றங்கரைக் கொப்பத்தில் (துங்கபத்திரை) மேலைச் சாளுக்கியன் ஆகவ மல்லன்
எனும் சோமேசுவரனை அச்சப்படுத்தி வென்று பரிவு காட்டி அவன் யானைப் படை, குதிரைப் படை, அரண்மனைப் பெண்டிர், கருவூலம் என எல்லாவற்றையும் கைப்பற்றி அவன் எல்லாச் சிறப்புகளையும் அழித்துப் பின் வீரத்திற்கு இலக்கணமான அரியணையில் அமர்ந்து ஆண்டான் எனக் குறிப்பிடுகின்றது. அவன் ஆட்சிக்கு உட்பட்ட விஜயராஜேந்திர மண்டலத்தின் பகுதியான தகடூர் நாட்டின் கங்க நாட்டுப் பிரிவான புல்லமங்கலத்தில் ராஜேந்திரச் சோழனுடைய அமைச்சரின் அரண்மனையில் இவன் மகன் *
சாமுண்டன்* பாம்பு கடித்து நஞ்சேறி இறந்தான். சாமுண்டனின் மனைவியான *விச்சக் கந்தி* என்பாள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். அதன் நினைவாக இந்நடுகல் நடப்பட்டது. இறுதி இரு வரிகள் ஆங்காங்கே சிதைந்து உள்ளன. வேந்தனுடைய அமைச்சராக அவனுக்கு கீழ்ப்பட்ட மன்னரே இருந்தனர் என்பதுடன் அரச குடும்பத்தவரே உடன்கட்டைப் வழக்கத்தை கைக்கொண்டனர் என்ற கருத்தை நோக்க
அவனமச்சி என்ற சொல் ஆள் பெயரல்ல என்று தெளியலாம். அது இராசேந்திரனுக்கு அமைச்சராக இருந்த பெயர் குறிக்கப்படாத ஓர் அரசனைத் தான் குறிக்கின்றது என்பது விளங்கும். இவன் மகன் சாமுண்டனே இறந்துள்ளான். அவன் மருமகள் விச்ச கந்தி என்பவள் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினாள்.


--Geetha Sambasivam 11:20, 5 ஜூலை 2012 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 5 July 2012, at 16:50. This page has been accessed 1,031 times.